/indian-express-tamil/media/media_files/oYNyuqGBelyRqok2rbSU.jpg)
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் - மும்பையில் ஜான் சீனா!
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியிரின் 3-வது மகன் ஆனந்த். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12-ம் தேதி ) தொடங்கி வருகிற 14 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா இன்று மதியம் மும்பை வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
John Cena 🔥🔥 Enters the Wedding venue in an Indian kurta ❤️✨ #johncenapic.twitter.com/IBxzE1v1tm
— Viral Bhayani (@viralbhayani77) July 12, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.