Virat Kohli | Mohammed Siraj: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. தொடக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டியது. இதனால், தென் ஆப்ரிக்க அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிராஜ் - 5வது விக்கெட்டை கைப்பற்றியது எப்படி?
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இந்த ஜோடியை 3.2வது ஓவரை வீசிய சிராஜ் உடைத்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
தனது பந்துவீச்சில் மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் சிராஜ் தொந்தரவு கொடுக்க, எல்கர் இன்சைடு -எட்ச் அடித்து 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி அமைத்த டோனி டி ஸோர்ஸி - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில், டோனியை 2 ரன்னுக்கு அவுட் எடுத்தார் சிராஜ். 3 ரன் எடுத்த ரிஸ்டன் தனது விக்கெட்டை பும்ராவிடம் பறிகொடுத்தார்.
களத்தில் இருந்த கைல் வெர்ரேய்ன் - டேவிட் பெடிங்காம் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், தனது மிரட்டல் பந்துவீச்சால் சேர்ந்து கொண்டிருந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் சிராஜ். டேவிட் பெடிங்காம் 12 ரன்னுக்கு அவுட் ஆனார். தனது தரமான பந்துவீச்சை சிராஜ் தொடர்ந்து கொண்டிருகையில், அவர் வீசிய 15 வது ஓவரை மார்கோ ஜான்சன் எதிர்கொண்டார்.
அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி மார்கோ ஜான்சனுக்கு ஒரு அவுட்-ஸ்விங்கரை வீசுமாறு சிராஜிடம் சைகை மூலம் கேட்டார். அதை சிராஜூம் அப்படி செய்து முடிக்க, பந்து மார்கோ ஜான்சனின் பேட்டில் அவுட்-சைடு எட்ச் ஆகி கீப்பர் ராகுல் வசம் கேட்ச் ஆனார். கோலி கொடுத்த யோசனையை அப்படி கடைபிடித்த சிராஜ் தனது 5வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். மார்கோ ஜான்சன் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்து நடத்திய சிராஜ் கைல் வெர்ரேய்ன் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். வெர்ரேய்ன் 15 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களின் விக்கெட்டை முகேஷ் குமாரும், பும்ராவும் மாறி மாறி வீழ்த்த தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், விராட் கோலி உதவியுடன் மார்கோ ஜான்சனின் விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் தனது 5வது விக்கெட்டை கைப்பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Virat Kohli asked Siraj to bowl an out-swinger to Marco Jansen.
— Scarlet Witch (@omegascarwitch) January 3, 2024
- Siraj did exactly that and got the reward.pic.twitter.com/KyLDelIJeR
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.