Video Of 'MS Dhoni From 2040' Goes Viral Tamil News
Watch: Video of 'MS Dhoni from 2040' breaks the internet, leaves CSK fans in shock Tamil News: ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான வலம் வரும் எம்.எஸ் தோனி நடப்பு சீசனுடன் ஓய்வு பெற உள்ளார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனால், சென்னை அணி இந்தியாவில் உள்ள எந்த மைதானத்தில் விளையாடினாலும், கேப்டன் தோனியை நேரில் பார்க்க வேண்டும், 'தல' தரிசனம் கிடைத்தால் போதும் என அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளார்கள்.
Advertisment
தோனி மகள் ஸிவா-வுடன் 2040-ல் பார்க்கும் மேட்ச்
இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் வயதான தோற்றம் உடைய ஒருவர் பார்ப்பதற்கு தோனி போன்று இருக்கிறார். அவருக்கு முன்புறமாக இளம் பெண் ஒருவரும் இருக்கிறார். அவர் தோனி மகள் ஸிவா சாயல் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்
Advertisment
Advertisements
அவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், 2040-ம் ஆண்டில் இருக்கும் தோனி போட்டியை பார்க்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், 'டைம் டிராவல் உண்மை தான் போல என்றும், 2040-ல் இருந்து மகளுடன் சென்னை போட்டியை பாக்க வந்துள்ளார் தோனி என்றும் கூறி வருகின்றனர்.