ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த 19ம் தேதி நடந்த லீக் தொடரில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
இதில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நேரில் காண அடில் தாஜ் எனும் பாகிஸ்தான் ரசிகரும் வந்திருந்தார்.
இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தான் ரசிகர்
இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, தன் தாய் நாடான பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடி முடிந்த பின் ஒலித்த இந்திய தேசிய கீதத்தையும் அவர் பாடியுள்ளார். இதனை அவரே பதிவு செய்தும் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக கேப்ஷனில், "அன்பை பரப்புங்கள். என்றும் அமைதி வேண்டும். முட்டாள்தனமான போர்கள் கூடாது" என்று அவர் குறிப்பிட்டிருப்பது இரு நாட்டு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசியல், குறுகிய மனப்பான்மை, மதம் என அனைத்தையும் கடந்து அன்பை மட்டும் வெளிப்படுத்திய இந்த பாகிஸ்தானும் ரசிகருக்கு நாமும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.