டெல்லி கால்பந்து லீக் தொடரில் நேற்று திங்கள்கிழமை நடந்த போட்டியில் அஹ்பாப் எஃப்.சி - ரேஞ்சர்ஸ் எஃப்.சி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 4-2 என்ற கணக்கில் அஹ்பாப் எஃப்.சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் போட்டியில் அஹ்பாப் எஃப்.சி அணி வீரர்கள் சேம் சைடு கோல் போட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், இது மேட்ச் பிக்சிங் ஆக இருக்கலாம் என்று கூறும் அளவிற்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தப் போட்டியில், அஹ்பாப் எஃப்.சி அணி வீரர்கள் ரேஞ்சர்ஸ் எஃப்.சிக்கு எதிராக தாமதமாக இரண்டு சந்தேகத்திற்குரிய சொந்த கோல்களை விட்டுக் கொடுத்தனர். அதாவது, சேம் சைடு கோல் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் அஹ்பாப் எஃப்.சி வீரர்கள் தங்களது பகுதியில் ரேஞ்சர்ஸ் அணி வீரர்களுக்கு மத்தியில் பந்தை மாறி மாறி பாஸ் போட்டு கடத்தி வருகிறார்கள். அப்போது கோல் கீப்பருக்கு வலதுபுறமாக இருக்கும் வீரர் தனது கிடைத்த பாஸை கோல் போஸ்ட் பக்கமாக கிக் அடிக்கிறார். அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்று கோல் ஆகி விடுகிறது. இதனை எதிர்பாராத கோல் கீப்பர் தலையில் கையை வைத்து அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார்.
இதேபோல், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் அஹ்பாப் எஃப்.சி வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமலும், அருகில் ரேஞ்சர்ஸ் அணி வீரர்கள் கூட இல்லாமலும் தங்கள் பகுதியில் மாறி மாறி பாஸ் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் நேரத்தை கடத்துவதற்காக அப்படி பாஸ் போட்டுக் கொள்வது போல் தெரிகிறது. நடுவர் முழு நேர முடியும் விசில் ஊதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கோல் கீப்பருக்கு இடதுபுறமாக இருக்கும் வீரர் தனது கிடைத்த பாஸை தனது சொந்த கோல் போஸ்டுக்குகள் கோல் அடித்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி எஃப்சி உரிமையாளர் ரஞ்சித் பஜாஜ், "டெல்லி கால்பந்து சீனியர் பிரீமியர் பிரிவில் பிக்ஸிங் அதிகமாக உள்ளது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அதனால்தான் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் அதில் மீண்டும் விளையாடுவோம் என்று கூறியுள்ளோம்."என்றார். டெல்லி கால்பந்து சங்கத்தின் முக்கிய ஸ்பான்சர் ஒரு பந்தயம் கட்டும் (பெட்டிங்) நிறுவனம் என்றும் பஜாஜ் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கல்யாண் சௌபே, இந்த வீடியோக்களின் அடிப்படையில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், சந்தேகத்திற்குரிய போட்டிகள் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நடந்த மற்ற சம்பவங்களின் கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவின் முதன்மை கால்பந்து அமைப்பு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்றும் அறிவித்துள்ளார்.
“டெல்லி பிரீமியர் லீக் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்பும் வகையில் எஸ்.எம்-மில் பரவும் வீடியோக்கள் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முதன்மையாக, இது மிகவும் கவலைக்குரியது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற நிகழ்வுகளை அகற்றுவதற்காக தொடர்ந்து விசாரணையுடன் சந்தேகத்திற்கிடமான போட்டிகள் குறித்த கடினமான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்." என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://t.co/wclleyfHfE I tweeted about it in January mid - no one did anything- again I have been proven right - can you believe they are not even trying to hide it now @FootballDelhi - these club owners are ruining the game - how the actual hell can we develop as a footballing… pic.twitter.com/dQ82HSTKCj
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) February 19, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.