/indian-express-tamil/media/media_files/ZzjfJgLFEuwQ9ugRQu2H.jpg)
வங்கதேச அணியில் நீண்ட காலமாக ஆல்-ரவுண்டராக இருந்து வரும் 2006 முதல் இதுவரை 67 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Bangladesh | Shakib Al Hasan:வங்கதேச மண்ணிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகளையும் வென்று வங்கதேச அணி தொடரை 3-0 கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: Shakib Al Hasan grabs selfie-seeking fan by his neck
இந்த நிலையில், வங்கதேச அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரரான ஷாகிப் அல் ஹசன் தன்னிடம் செல்ஃபி கேட்ட ரசிகரின் கழுத்தைப் பிடித்து தள்ளியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனை அணுகி செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கேட்கிறார். அப்போது ஷகிப் தனது அணியின் மற்ற உறுப்பினர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.
ரசிகரின் கோரிக்கைக்கு முதலில் ஷகிப் பணிவுடன் மறுத்துவிட்டார். ஆனால் அந்த ரசிகன் ஷாகிப்பை தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க கிளிக் செய்ய முயற்சி செய்கிறார். இதனைப் பார்த்து கடுப்பான ஷாகிப் ரசிகரின் போனை பறிக்க முயற்சிப்பதைக் காணலாம். ரசிகர் ஷாகிப்பின் பிடியில் இருந்து போனை மறைக்கும் போது, அவர் அவரது கழுத்துக்குப் பின்னால் தனது கையை வைத்து பிடித்து, அவரை மைதானத்திற்கு வெளியே தள்ளுகிறார்.
வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கையின்படி, டாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஷகிப் கடந்த காலங்களிலும் இதுபோன்ற அசிங்கமான சம்பவங்களில் ஈடுபட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
வங்கதேச அணியில் நீண்ட காலமாக ஆல்-ரவுண்டராக இருந்து வரும் 2006 முதல் இதுவரை 67 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரை வங்கதேசத்தின் உச்ச கிரிக்கெட் நட்சத்திரமாக ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
தற்போது வங்கதேச அணிக்காக டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.ஒருநாள் போட்டிகளில், ஆல்ரவுண்டர் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர், வங்கதேசத்துக்காக டெஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தங்கள் அணியை வங்கதேசம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Shakib al Hasan 🇧🇩🏏 went to beat a fan who tried to take a selfie 🤳
— Fourth Umpire (@UmpireFourth) May 7, 2024
Your thoughts on this 👇👇👇 pic.twitter.com/k0uVppVjQw
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.