India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி இந்தூர் சென்றடைந்த நிலையில், இந்தியாவின் தூய்மையான நகரம் என அழைக்கப்படும் இந்தூரில் தங்கியிருக்கும் போது, அந்த நகரத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
குல்தீப் யாதவ் பேசுவதுடன் தொடங்கும் அந்த வீடியோவில் அவர், “இந்தூரில் நிறைய கிரிக்கெட் நினைவுகள் உள்ளன. உணவு மற்றும் புகழ்பெற்ற சரஃபா சந்தையைத்தான் நான் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்." என்று கூறுகிறார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி வீரர்கள் இந்தோரி போஹா-வை ருசிக்க வேண்டும் என ஃபீல்டிங் பயிற்சியாளர் கூறுகிறார். "இந்தூருக்கு வரும்போது, நான் போஹா என்றுதான் சொல்ல முடியும்." என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சஞ்சு சாம்சனுக்கு, இந்தூர் என்றால் அவேஷ் கான் மற்றும் அவரது நகைச்சுவைகளைப் பற்றியது தான் என்று கூறுகிறார். “இந்தூரைச் சேர்ந்தவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். அவர்கள் மிகவும் இயல்பாக நகைச்சுவைகளை கூறுகிறவர்கள், அவர்களில் ஒருவர் எங்கள் அணியில் இருக்கும் அவேஷ் கான் என்று நான் உணர்கிறேன். அவர் பேசினாலே நாங்கள் அனைவரும் சிரிக்கிறோம். இந்தூரில் அவேஷுடன் நன்றாகச் சிரிக்கக் காத்திருக்கிறேன்,” என்கிறார் சஞ்சு.
இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய டிரஸ்ஸிங் அறையை சுட்டிக்காட்டுகிறார் சுப்மான் கில். அந்த டிரஸ்ஸிங் அறைக்கு புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேனும், தற்போதைய இந்திய அணி தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்-டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "ஹோல்கர் ஸ்டேடியம் என்றால், ராகுல் சாரின் டிரஸ்ஸிங் ரூம் தான்" என்கிறார் கில்.
வாஷிக்டன் சுந்தர் மற்றும் வீடியோ மற்றும் தரவு ஆய்வாளர்களுக்கு இந்தூருக்கு வருவது உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவில் என்று கூறுகிறார்கள்.
உள்ளூர் வீரரான அவேஷ் கான், "அனைவருக்கும் வணக்கம். எனது நகரமான இந்தூருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்" என்று கூறி அனைவரையும் வரவேற்கிறார்.
இங்கு பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அதிக ரன்களை குவிக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கிறார். “இந்தூர் எனக்கு ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட். இது அதிக ரன்களை குவிக்கும் இடம், அதனால் நான் அதை எதிர்நோக்குகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“