இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த மாதம் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்றி இருந்தார். தொடர் முழுதும் தனது மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் நாயகன்விருதைப் பெற்று அசத்தினார். தற்போது பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார். அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிறுவன் ஒருவர் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் மூலம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறார். அவரது பவுலிங் ஆக்சனைப் பார்த்து வியந்து போன பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம், அந்த சிறுவன் பும்ரா போல் அதே ஆக்சனில், அவரைப் போலவே கண்ட்ரோலாக வீசி அசத்துகிறார் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, டி20 போட்டிகளில் மட்டுமின்றி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா சமீபத்தில் பாராட்டினார். மேலும் அவர், "பும்ரா மூன்று வடிவங்களின் ஜாம்பவான்" என்றும் புகழ்ந்து பேசினார்.
"எனது புத்தகத்தில், ஜஸ்பிரித் பும்ரா மூன்று வடிவங்களிலும் ஒரு ஜாம்பவான் எனக் கூறியுள்ளேன். மூன்று வடிவங்களிலும் விளையாடிய பெரிய வீரர் யாரும் இல்லை. எனவே, இவர் எங்கிருந்து வந்தார் என்பதை நீங்கள் பார்க்கலாம், அவர் நம்பிக்கையின்மை, மோசமான பந்துவீச்சு நடவடிக்கை போன்ற தடை கற்களை தர்கார்த்து எறிந்துள்ளார். இப்போது அவர் இந்தியாவை உலகக் கோப்பையை வெல்லச் செய்துள்ளார்" என்று ரமீஸ் ராஜா தனது யூடியூப் சேனலில் கூறினார்.
Wah jee wah look at that control and action exactly like the great @Jaspritbumrah93 video of the day for me . #crickethavenoboundiers https://t.co/Ut215HD3iB
— Wasim Akram (@wasimakramlive) July 15, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.