/tamil-ie/media/media_files/uploads/2022/12/tamil-indian-express-2022-12-02T125411.709.jpg)
Vijay Hazare Trophy 2022 - Saurashtra vs Maharashtra, Final - Ruturaj Gaikwad Tamil News
Vijay Hazare Trophy 2022 - Ruturaj Gaikwad Tamil News: 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்காக கடந்த 30ந் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகளும், மகாராஷ்டிரா - அசாம் அணிகளும் மோதின. இதில் சவுராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இறுதிப்போட்டியிலும் சதமடித்து மிரட்டிய கேப்டன் ருத்து
/tamil-ie/media/media_files/uploads/2022/12/tamil-indian-express-2022-12-02T125335.302.jpg)
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்தது. இதில் அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 131 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காலிறுதியில் 220*(159) ரன்களும், அரையிறுதியில் 168(126) ரன்களும் குவித்து இருந்தார். இந்த நிலையில் இறுதிப் போட்டியிலும் 108 (131) ரன்கள் எடுத்து மிரட்டியுள்ளார்.
தவிர, விஜய் ஹசாரே தொடரின் 10 போட்டிகளில் 8 சதங்களுடன் 1,263 ரன்கள் குவித்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
2⃣2⃣0⃣* in Quarterfinal
1⃣6⃣8⃣ in Semi-final
💯 up & going strong in the #Final
What a sensational run of form this has been for Maharashtra captain @Ruutu1331! 🙌 🙌
Follow the match 👉 https://t.co/CGhKsFzC4g#VijayHazareTrophy | #SAUvMAH | @mastercardindiapic.twitter.com/jbgdg3O1Eu— BCCI Domestic (@BCCIdomestic) December 2, 2022
மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்துள்ளது. இதனால், சவுராஷ்டிரா அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பந்துவீச்சில் சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக சிராக் ஜானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
249 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே டிராபி சாம்பியன்ஸ் 2022 பட்டத்தை வென்றது.
சவுராஷ்டிரா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷெல்டன் ஜாக்சன் 136 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் விளாசி 133 குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.