scorecardresearch

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறியது!

Tamil Nadu reaches to semifinal after beating Karnataka by 151 runs Tamil News: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது காலியிறுதியில், 151 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Vijay Hazare Trophy Tamil News: Tamil Nadu beats Karnataka in 2nd Quarterfinals

Tamil Nadu vs Karnataka, Quarter Final 2 Tamil News: 2021 – 2022ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இன்று நடந்த 2வது காலியிறுதியில் கர்நாடகா – தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே தமிழக அணி முதலில் பேட்டிங் செய்ததது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் அவருடன் மறுமுனையில் இருந்த ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி 102 ரன்கள் (101 பந்துகள், 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்.

அணியில் தொடர்ந்து களமிறங்கிய ரவிஸ்ரீனிவாசன் (61), தினேஷ் கார்த்திக் (44), இந்திரஜித் (31) இரட்டை இலக்க ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்கள். பின்னர் வந்த விஜய் சங்கர் (3), வாஷிங்டன் சுந்தர் (0), சித்தார்த் (0) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

இருப்பினும், தொடர் முழுதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மிடில்-ஆடர் வீரர் ஷாருக் கான் இம்முறையும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 39 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர் என வானவேடிக்கை காட்டிய அவர் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்ளை இழந்த தமிழக அணி 354 ரன்கள் சேர்த்தது. எனவே, கர்நாடக அணிக்கு 355 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

355 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கர்நாடக அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் முன்னணி வீரர் தேவ்தட் படிக்கல் (0), கேப்டன் மணீஷ் பாண்டே (9) சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் வீரர் ஸ்ரீனிவாஸ் சரத் 43 ரன்கள் எடுத்தார்.

தொடர்ச்சியாக விக்கெட் இழப்பை சந்தித்து வந்த கர்நாடக அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 203 ரன்னில் சுருண்டது. இதனால், தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தமிழக அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய சிலம்பரசன் 4 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும்,
சந்தீப் வாரியர், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போது கர்நாடக அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள தமிழக அணி வருகிற வெள்ளிக்கிழமை (24ம் தேதி) நடக்கவுள்ள அரையிறுதியில் களமிறங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Vijay hazare trophy tamil news tamil nadu beats karnataka in 2nd quarterfinals