Advertisment

இந்த அன்பு 1,000 ஒலிம்பிக் தங்க பதக்கங்களை விட மதிப்புமிக்கது: வினேஷ் போகத் உருக்கம்

கூடியிருந்த மக்கள் கோஷங்களை எழுப்பி, ரோஜா இதழ்களைப் பொழிந்து, சாமந்தி மலர் மாலைகளால் அவரை வரவேற்றனர்.

author-image
WebDesk
New Update
Vinesh

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேற்று (சனிக்கிழமை) நாடு திருப்பினார். அவர் கழுத்தில் பதக்கம் இல்லாத நிலையிலும் அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இது எந்த வீரருக்கும் கிடைத்ததில்லை. இது மல்யுத்த வீராங்கனையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisment

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்ததில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க கனவு பறிபோனது. நாடே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் கோரி அவர் மனுத் தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவில்  தள்ளுபடி செய்யப்பட்டது. 

சனிக்கிழமையன்று, காலை 10.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3-ன் கேட் எண். 18ல் இருந்து வெளியேறியபோது, ​​போகத் சோகத்தில் இருந்தது தெரிந்தது - பாரிஸில் தவறவிட்ட பதக்கத்தின்  அதிர்ச்சி அவரது முகத்தில் பெரிதாக இருந்தது. 

தூக்கமின்மையால் கண்கள் சோர்வாக இருந்தன, கன்னங்கள் சுருங்கியது, மற்றும் ஒரு குழப்பமான ஹேர்கட் தனது பயிற்சியாளரால் இறுதி எடைக்கு முந்தைய இரவின் கொடுமையான நினைவூட்டலைக் கொடுத்தது. 

பிறகு அவர் சிரித்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) முன்னாள் தலைவர் மற்றும் BJP தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜந்தர் மந்தரில் அவர் அமர்ந்திருந்த அவரது தாயார், சகோதரர், மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சக வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோரை அவர் கண்டார். 

போகத் வெளியே இருந்த ஒரு காருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் மேல் உட்கார வைக்கப்பட்டார். கூடியிருந்த மக்கள் கோஷங்களை எழுப்பி, ரோஜா இதழ்களைப் பொழிந்து, சாமந்தி மலர் மாலைகளால் அவரை வரவேற்றனர். பாசத்தை வெளிப்படுத்தியதால், மல்யுத்த வீரர் உடைந்து, கண்ணீரைத் துடைத்து, கூட்டத்தை அங்கீகரிப்பதற்காக கைகளைக் கூப்பினார்.

ஹரியானாவின் கிராமப்புறங்களில் இருந்து டெல்லிக்கு வந்த பள்ளி மாணவிகள் குழு, இதுவரை யாரும் வீழ்த்த முடியாமல் இருந்த ஜப்பானிய ஜாம்பவான் யுய் சுசாகியை “வினேஷ் தீடி” வீழ்த்திய போகத் பற்றி பேசுவதைக் கேட்க முடிந்தது.

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இவரும் ஹரியானாவை சேர்ந்தவர். அதனால் இங்கு அரசியலை வறவிடுவது கடினமாக இருந்தது. விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் ஹூடா, போகத்தை வரவேற்றார்.  பாஜக உறுப்பினரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங்கும் உடனிருந்தார். 

போகத் அமர வைக்கப்பட்ட காரில் என் மகள், தூய தங்கம் என்று எழுதப்பட்டு மல்யுத்த வீராங்கனையின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.  டெல்லியில் இருந்து ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள பலாலி கிராமம் வரை அவருக்கு ஆங்காங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆங்கிலத்தில் படிக்க:    Vinesh returns: Love I got worth more than 1,000 Olympic Golds

இந்த வரவேற்பால் உணர்ச்சி வசப்பட்ட போகத் கண்ணீர் சிந்தினார். பிறகு அங்கிருந்த மக்களிடையே பேசிய அவர், “எனக்கு தங்கப் பதக்கம் கொடுக்கவில்லை என்றால் என்ன, இங்குள்ளவர்கள் அதை விட அதிகமாக அன்பை கொடுத்துவிட்டார்கள். நான் பெற்ற அன்பும் மரியாதையும் ஆயிரம் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கது, ”என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment