பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக் திருவிழா கடந்த 11 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Vinesh Phogat India Arrival Live Updates
தகுதிநீக்கம்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், 'இனி என்னிடம் போராட சக்தியில்லை' என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேல்முறையீடு
இருப்பினும், வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை எதிர்த்து அவர் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச மல்யுத்த சம்மேளம் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இறுதிப்போட்டிக்கு முன்புவரை எடை சரியாக இருந்த வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக நேற்று வெளியாகிய தீர்ப்பில் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்தது.
உற்சாக வரவேற்பு
இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சனிக்கிழமை வந்தடைந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “வினேஷ் நாடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்க மக்கள் இங்கு (டெல்லி) விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவரை வரவேற்க எங்கள் கிராமத்திலும் மக்கள் காத்திருக்கின்றனர். வினேஷைச் சந்தித்து அவரை ஊக்கப்படுத்த மக்கள் உற்சாகமாக உள்ளனர்,” என்று அவரது சகோதரர் ஹர்விந்தர் போகட் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/5bc51dee-80c.png)
ஹரியானாவில் உள்ள பலாலியில் உள்ள அவரது சொந்த கிராமத்திலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் அவர்களது கிராமத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் வினேஷை வரவேற்க கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுக்காக மொத்தம் 750 கிலோ பூந்தி லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத் தலைமையகமான சர்க்கி தாத்ரியில் இருந்து ஹல்வாய்கள் வந்து நேற்றிரவு முதல் லட்டுகளைத் தயாரித்து வருகின்றன.
/indian-express-tamil/media/post_attachments/f3e4ff72-65c.png)
/indian-express-tamil/media/post_attachments/fit-in/464x0/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2024/08/51454WhatsApp-Image-2024-08-17-at-11.13.33-AM.jpeg)

“தங்க நிற லட்டுகள் எங்கள் கிராமத்திற்கு தங்க மகளை வரவேற்புக்காக தாயார் செய்துள்ளோம். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய நாள், மேலும் லடூஸ் தயாரிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது எங்கள் அதிர்ஷ்டம்,” என்கிறார் ஹல்வாய் மந்தீப் சுவாமி. கோவில் தலைவர் ராம்குமாரும் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார். “எங்களது மகள் வருகை தர உள்ளார். அவருக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் தகுதியானது தான். அவரைக் காண 10,000-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்கிறார் 72 வயதான ராம்குமார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“