இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாக்கியுள்ளது. கூகுளின் இயர் இன் சர்ச் அறிக்கையின்படி, 2024-ல் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கோபா அமெரிக்கா, யு.இ.எஃப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை ஆகிய மூன்றும் ஒட்டுமொத்த தேடல்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதே நேரத்தில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கூகுளின் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் களமாடி தங்கம் வென்ற அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஸ்பானிஷ் கால்பந்து வீரர் லாமின் யமல் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் போன்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நபர்கள் ஆவர்.
2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஷஷாங்க் சிங் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற தவறவிட்டனர்.
மல்யுத்த வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய வினேஷ் போகத், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2-ம் இடத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிடித்துள்ளார். அவர் ஜனவரியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) மீண்டும் இணைந்தார். 2014 க்குப் பிறகு முதல் முறையாக மக்களவையில் பெரும்பான்மையை இழந்த என்.டி.ஏ கூட்டணியில், 12 தொகுதிகளை வென்ற நிதிஸ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கைகோர்த்தது.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைந்ததன் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முன்னாள் நடிகரான பாஸ்வான் தற்போது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக உள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டு நடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக இறுதி ஓவரை பாண்டியா வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தப் பட்டியலில் ஷஷாங்க் சிங் (கிரிக்கெட் வீரர்), பூனம் பாண்டே (மாடல்), ராதிகா மெர்ச்சன்ட் (பிசினஸ் தலைவர்), அபிஷேக் சர்மா (கிரிக்கெட் வீரர்) மற்றும் லக்ஷ்யா சென் (பேட்மிண்டன் வீராங்கனை) ஆகியோர் 5-10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.