Former indian cricketer Vinod Kambli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இந்திய அணியில் 1991 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3561 ரன்களை குவித்துள்ளார். 200ம் ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இவர் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
இவர் கடைசியாக கடந்த 2019-ல் மும்பையில் நடைபெற்ற டி20 லீக்கில் பயிற்சியாளராக செயல்பட்டார். 50 வயதான இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் பென்ஷனாக கிடைத்து வருகிறது. ஆனால், இந்த பணம் போதாது என்றும் தனது குடும்பத்தை கவனிக்க தனக்கு வேலை வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதாகவும், தனது தற்போதைய நிலை குறித்து தனது பால்ய கால நண்பரும், உடன் விளையாடிய சக வீரருமான சச்சின் டெண்டுல்கருக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து தான் எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றும் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார்.
"சச்சினுக்கு அனைத்தும் தெரியும். நான் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியின் அசைன்மென்ட் கொடுத்து உதவினார். அவர் எனக்கு சிறந்த நண்பராக இருக்கிறார். இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்று வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி பயன்படுத்தி வரும் செல்போனின் டிஸ்பிளே சேதமடைந்து இருக்கிறதாம். தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் வாட்ச் அணிந்திருப்பது அவரது டிரேட் மார்க் அடையாளம். ஆனால், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அவர், இப்போது அதனை அணிந்திருக்கவில்லை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.