முன்தினம் இரவு 10 பெக் போதை… அடுத்த நாள் சதம்: வினோத் காம்ப்ளி சுவாரசிய ஃப்ளாஷ்பேக்
'Coach thought I won't wake up after having 10 pegs but I scored hundred' said former indian critter Vinod Kambli Tamil News: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஞ்சி டிராபி போட்டியின் நடுவே 10 பெக் மதுபானம் அருந்தியதாகவும், அடுத்த நாள் சதம் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
'Coach thought I won't wake up after having 10 pegs but I scored hundred' said former indian critter Vinod Kambli Tamil News: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஞ்சி டிராபி போட்டியின் நடுவே 10 பெக் மதுபானம் அருந்தியதாகவும், அடுத்த நாள் சதம் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Vinod Kambli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இந்திய அணியில் 1991 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3561 ரன்களை குவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இவரின் பல சாதனைகள் இன்றளவும் முறியடிக்க முடியா ஒன்றாக இருந்து வருகிறது.
Advertisment
வினோத் காம்ப்ளி, 1993ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் தனது சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்தார். இந்த அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர், சர்வதேச அரங்கில் 3வது வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். அப்போது அவருக்கு வயது 21 ஆண்டுகள் 32 நாட்கள் ஆகும். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, அவரது சாதனை இன்னும் அப்படியே உள்ளது.
இதேபோல், 1994 ஆம் ஆண்டில், அதே வான்கடே மைதானத்தில், 14 இன்னிங்ஸ்களில் 1000 டெஸ்ட் ரன்களை எட்டிய இளம் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார் வினோத் காம்ப்ளி. இந்த சாதனை மூலம் அவர் புகழ்பெற்ற டான் பிராட்மேனையும், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் எவர்டன் வீக்ஸ் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார்.
Advertisment
Advertisements
இப்படி அசாத்திய வீரராக திகழ்ந்த காம்ப்ளி, அதன் பிறகு ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். உண்மையில், அவரது டெஸ்ட் வாழ்க்கை, ஒரு வருடம் கழித்து முடிவுக்கு வந்தது.
இவையெல்லாம் இருந்தபோதிலும், 54 ரன்களின் சராசரியில் இருந்த ஒரு பேட்டர், இரண்டு இரட்டை சதங்கள் உட்பட நான்கு சதங்களுடன் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியது ஏன் என்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல. ஏன்னென்றால், காம்ப்ளி சிறந்த வீரராக இருந்த நாட்களில் அதிகம் சேட்டை செய்யும் வீராகவும், முறையான ஒழுக்கமில்லாத வீராகவும் இருந்துள்ளார். இதனால், அதன் பாதிப்பை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 50 வயதை கடந்துள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் பென்ஷனாக கிடைத்து வருகிறது. அதை வைத்தது தான் குடும்பத்தையும், தன்னையும் கவனித்து வருகிறார். ஆனால், இந்த தொகை போதாது என்றும் தனது குடும்பத்தை கவனிக்க தனக்கு வேலை வேண்டும் என்றும் அவர் சமீபத்திதில் தெரிவித்து இருந்தார்.
மேலும், தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதாகவும், தனது தற்போதைய நிலை குறித்து தனது பால்ய கால நண்பரும், உடன் விளையாடிய சக வீரருமான சச்சின் டெண்டுல்கருக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரிடமிருந்து தான் எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மும்பை கிரிக்கெட் சங்கத்தில் வேலை பெறுவதற்காக தனது பளபளப்பான வாழ்க்கை முறையைத் துறக்கவும் தயாராகிவிட்டார். முந்தைய இரவில் 10 பெக் மது அருந்திவிட்டு சதம் அடித்ததாகக் கூறப்படும் இந்த இடது கை ஆட்டக்காரர், இப்போது மதுவைக் கைவிடவும், பயிற்சியாளர் பணியில் தன்னை ஈடுபடுத்துக்கொள்ளவும் கூட தயாராக இருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஞ்சி டிராபி போட்டியின் நடுவே 10 பெக் மதுபானம் அருந்தியதாகவும், அடுத்த நாள் சதம் அடித்ததாகவும் தெரிவித்தார். "எங்கள் பயிற்சியாளர் பல்விந்தர் சிங் சந்து நான் சரியான நேரத்தில் எழுந்திருப்பேனா என்று கவலைப்பட்டார். ஆனால், நான் சதம் அடித்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளன. சில விஷயங்களைச் செய்ய அனுமதிக்காத விதிகள் ஏதேனும் இருந்தால், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யச் சொன்னால் உடனடியாக அதை <குடிப்பதை> நிறுத்திவிடுவேன். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்றும் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார்.
வினோத் காம்ப்ளி, பள்ளி கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருடன் ஒரு சாதனை பார்ட்னர்ஷிப்பைத் அமைத்ததன் மூலம் முதலில் வெளி உலகிற்கு தெரிய வந்தார். தற்போது அவர் மும்பை கிரிக்கெட்டுக்கு தான் எந்தத் திறனிலும் உதவத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.