இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு மும்பையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கேப்டன் விராட் கோலியின் மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவர் வந்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஏற்கனவே, விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடியும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், சக கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்களுக்கென மீண்டும் ஒரு திருமண வரவேற்பு மும்பையில் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/anu-300x200.jpg)
இந்த திருமண வரவேற்பில், விராட் கோலியின் தீவிர ரசிகரான கயன் சேனாநாயகே என்ற மாற்றுத்திறனாளி கலந்துகொண்டார். இலங்கையை சேர்ந்த இவர், இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகராவார். விராட் கோலிக்கு இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பரிச்சயமானவர். அதனால், தன்னுடைய திருமண வரவேற்புக்கு விராட் கோலியே அவரை அழைத்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/anu1-300x186.jpg)