virat kholi instgram video : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பிட்னெஸ் ரகசியம் எனப்து அனைவரையும் வாவ் சொல்ல வைக்கும் ஒன்று. இதுவரை கோலியின் உடற்பயிற்சி வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வைரலானது மட்டுமில்லாமல் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அந்த வகையில் விராட் கோலியின் பிட்னெஸ் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் அடுத்தடுத்து வீடியோக்களின் மொத்த தொகுப்பை இங்கே காணலாம்.
பிட்னெஸ் புலி விராட் அவ்வப்போது அவரின் உடற்பயிற்சி வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார். இந்த வீடியோவுக்கு அவரின் காதல் மனைவி அனுஷ்காவிற்கும் பங்கு உண்டு. அவரின் அனைத்து வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருபவர் அனுஷ்கா தான். இப்போது லாக்டவுனில் மொத்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டில் அடைந்திருக்கின்றனர். அப்படி வீட்டில் இருக்கும் விராட் சும்மா இல்லை. வெற லெவலில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களிடம் உடற்பயிற்சி முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்..
இதோ வாவ் சொல்ல வைக்கும் விராட் உடற்பயிற்சி வீடியோஸ்..
சில தினங்களுக்கு முன்பு கூட விராட் பளூ தூக்கும் பயிற்சியையும் கூடவே ஜம்பிங்கையும் சேர்த்து அசத்தலான வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து 180 லாண்டிங் வொர்க் அவுட்டை செய்து மிரட்டி இருந்தார். மொத்தத்தில் இந்த லாக்டவுனில் விராட்டின் இந்த பயிற்சிகள் அவரை மேலும் ஆரோக்கியமாக இருக்க உதவும் என்பதில்லை சந்தேகமில்லை.