Virat kohli 31st birthday special photos - இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி... கோலி...!! பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்
விராட் கோலி.... இன்று இந்திய கிரிக்கெட்டின் பிளாக் ஹோல் இவர் தான். இவருடைய ரசிகர்கள் பல நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் என்பதே இவரது ஸ்டார்டமை உரக்க நமக்கு உணர்த்தும். இந்திய மண் பெற்றெடுத்த வலிமையான மனம் படைத்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மிக முக்கியமானவரான விராட் கோலிக்கு இன்று வயது 31.
Advertisment
கோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ,
Source: Express photo by Jasbir Malhi
Advertisment
Advertisements
U-16 கிரிக்கெட் விளையாடிய போது, தனது சிறுவயது நண்பர்களான சர்வ்ப்ரீத் சிங் மற்றும் வருண் சூட் உடன் கோலி
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவர் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். தற்போது வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவர், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேபாளத்தில் இருக்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து அவர் தனது பொழுதை போக்கி மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் கோலி விளையாடுகிறார். அப்போது அவர் அணியுடன் இணைந்து கொள்வார்.
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரத்து 36 ரன் எடுத்துள்ளார். 82 டெஸ்டில் விளையாடி 7,066 ரன்னும் (26 சதம், 22 அரை சதம்), 239 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11,520 ரன்னும் (43 சதம், 54 அரை சதம்) எடுத்துள்ளார்.
விராட் கோலி இதுவரை 72 இருபது ஓவரில் விளையாடி 2,450 ரன் எடுத்துள்ளார். 22 அரை சதம் இதில் அடங்கும். 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை.