Asia Cup Cricket 2022 - Virat Kohli Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், இன்று மாலை 7:30 மணிக்கு துபாயில் அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன.
100 வது ஆட்டத்தில் கோலி…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் அவரது 100 வது சர்வதேச டி-20 ஆட்டமாகும். கடந்த 2 ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் அடிக்காத 33 வயதான கோலி, இந்த ஆட்டத்தில் தனது ஃபார்மை மீட்டெடுத்து மிரட்டில் அடி அடிப்பாரா என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.
விராட் கோலி இதுவரை இந்தியாவுக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 8074, 12344 மற்றும் 3308 ரன்கள் எடுத்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டிகளில் 43) விளாசியுள்ளார்.
இன்று 100-வது சர்வதேச டி-20 -யில் அவர் களமிறங்குவதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் குறைந்தது 100 ஆட்டங்களுக்கு மேல் கால்பதித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெறப்போகிறார். முன்னதாக, மூன்று வடிவிலான போட்டிகளிலும் குறைந்தது 100 போட்டிகளை விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றார். முன்னாள் நியூசிலாந்து கேப்டனான இவர் கடந்த பிப்ரவரி 2020ல் இந்த சாதனையை நிகழ்த்தினார். 38 வயதான அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.
இந்திய அணியில் விராட் கோலி ஆகஸ்ட் 18, 2008 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அவர் தனது முதல் டி20 ஆட்டத்தை ஜூன் 12, 2010 ஆம் ஆண்டு அன்று ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினார். அவர் கடைசியாக நவம்பர் 2019 இல் சதம் விளாசி இருந்தார்.
14வது வீரராக கோலி…
இந்திய கேப்டன் ரோகித் சர்மா (132) தலைமையில் 100 டி20 போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை கோலி பெற இருக்கிறார். இந்திய தரவரிசையில் முன்னாள் கேப்டன் தோனி 98 போட்டிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஆனால் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் (664) வசப்படுத்தியுள்ளார். இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே 600 சர்வதேச போட்டிகள் (652) என்ற சாதனையை கடந்த ஒரே வீரர் ஆவார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.