/tamil-ie/media/media_files/uploads/2017/12/z992.jpg)
இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திருமணம் செய்து கொண்டனர். மிக மிக ரகசியமாக நடைபெற்ற இத்திருமணம் குறித்து சில மணி நேரங்கள் கழித்தே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து இத்தாலியிலேயே தங்களது தேனிலவையும் 'விருஷ்கா' ஜோடி கொண்டாடி வருகிறது.
தேனிலவு முடிந்தவுடன் நாடு திரும்பும் விராட் - அனுஷ்கா, புது டெல்லியில் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் ரிசப்ஷனிலும், டிசம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இரண்டாவது ரிசப்ஷனிலும் கலந்து கொள்கின்றனர்.
இந்த ரிசப்ஷனுக்காக வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர். பத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.
Virat and Anushka's wedding invitation was very special ????
இந்த புதுமையான ஐடியாவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Check out Virat Kohli and Anushka Sharma's wedding reception invitationhttps://t.co/ffQieC4HWf … #VirushkaWEDDING#AnushkaSharma#ViratKohlipic.twitter.com/uc3RozFGo0
— pinkvilla (@pinkvilla) 11 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.