முதல் டி20 வெற்றி: ஸ்பெஷல் டின்னரில் கோலி, தோனி & கோ!

தவான், தோனி, ரெய்னா, லோகேஷ் ராகுல், பாண்ட்யா ஆகியோர் அந்த டின்னரில் கலந்து கொண்டனர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-1 என கைப்பற்றிய பின், நேற்று நடந்த முதல் டி20 போட்டியையும் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணி. கேப்டன் விராட் கோலி இதனை ‘எங்களின் சிறந்த சமநிலையான வெற்றி’ என குறிப்பிட்டு இருந்தார்.

ஷிகர் தவான் தனது நான்காவது டி20 அரை சதத்தை விளாச, புவனேஷ் குமார் முதன் முதலாக டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வெற்றியை விராட் கோலி டின்னருடன் கொண்டாடியுள்ளார்.

தோனி, ரெய்னா, தவான், லோகேஷ் ராகுல், பாண்ட்யா ஆகியோர் அந்த டின்னரில் கலந்து கொண்டனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Virat kohli and boys celebrate first t20i victory against south africa with dinner see pic

Next Story
ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com