Virat-kohli | rohit-sharma: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 6ம் தேதி நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள பாப்-அப் மைதானத்தில் நடைபெறும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், டி20 போட்டிகளில் தாங்கள் விளையாட தயாராக இருப்பதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பி.சி.சி.ஐ-க்கு தகவல் அளித்துள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இருபினும், டி20 போட்டிகளுக்கான அணி தேர்வுக்கு தாங்கள் தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது. ரோகித் மற்றும் கோலி இவ்வாறு தெரிவித்து இருப்பது ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. அத்துடன், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் தேர்வுக்கு கிடைக்காததால், டி20 போட்டிகளுக்கு தேர்வுக் குழு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
மற்றொரு முக்கிய விஷயமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தேர்வுக் குழு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. நேற்று வியாழக்கிழமை கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியில் சிராஜ் மற்றும் பும்ரா முக்கிய பங்கு வகித்தனர். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா சமன் செய்தது.
இந்நிலையில், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான நீண்ட தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் தங்களது இரண்டு ஃபார்ம் வேகப்பந்து வீச்சாளர்களை முழு உடற்தகுதியுடன் இருக்க விரும்புகிறது.
இந்திய அணியின் மூன்று தேர்வாளர்களான எஸ்எஸ் தாஸ், சலில் அன்கோலா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கேப்டவுனில் உள்ளனர். ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்பது குறிபிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli, Rohit Sharma are keen to play T20 Internationals
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“