Kohli angry over fans chant : ரசிகர்கள் எழுப்பிய தோனி கரகோசத்தால், கேப்டன் கோலி, பார்வையாளர்களை நோக்கி கடுப்பான போட்டோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
virat kohli, virat kohli crowd, virat kohli rishabh pant, rishabh pant, rishabh pant watch, rishabh pant catch, india vs west indies, india vs west indies t20, ind vs wi, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், டி 20 , கிரிக்கெட், திருவனந்தபுரம், ரிஷப் பண்ட், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரசிகர்கள், கோஷம்
இந்திய – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டியில், ரசிகர்கள் எழுப்பிய தோனி கரகோசத்தால், கேப்டன் கோலி, பார்வையாளர்களை நோக்கி கடுப்பான போட்டோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்றது.
கேரள வீரர் சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலில், சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாதது, ரசிகர்களை பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின்போது, 5 ஓவரில், எவின் லூயிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவற விட்டார். இதனால், ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியான நிலையில், திடீரென்று அவர்கள், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் பெயரை உரக்க சொல்ல துவங்கினர்.
ஒருவர் துவக்க, மைதானம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் தோனி, தோனி என்று கத்த துவங்கினர். இதனால், கேப்டன் விராட் கோலி, செம கடுப்பானார். ரசிகர்களை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் சார்பில் ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். இந்நிலையில், நீங்கள் தோனி தோனி என்று கூச்சல் இடுவது, அவருக்கு செய்யும் அவமரியாதையாக கருதுவதாக கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.