/indian-express-tamil/media/media_files/4jpktE5huWm7iheV0KPV.jpg)
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
Anushka Virat Welcome Baby Boy | Anushka Sharma | Virat Kohli | விராத் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியர் தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்தக் குழந்தை பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்துள்ளது.
இந்தத் தகவலை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் குழந்தையின் பெயரையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா- விராத் ஜோடி தங்களின் 2வது குழந்தைக்கு அகாய் (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில், “மிகவும் மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த எங்கள் இதயத்துடனும், பிப்ரவரி 15 அன்று, எங்கள் ஆண் குழந்தை அகாயையும் வாமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் கோருகிறோம். அதேநேரத்தில், இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை தயவுசெய்து மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனறு பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு நடிகர் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அனுஷ்கா சர்மா- விராத் கோலி குழந்தை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதில் சில வதந்திகளும் அடங்கும். இந்த விவகாரத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்த சில பிரபலங்கள் பின்னர் வருத்தம் தெரிவித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.