பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துபெற்ற விராட்கோலி – அனுஷ்கா சர்மா

கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

நீண்ட நாள் காதலர்களான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கடந்த 11-ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இன்று (வியாழக் கிழமை) டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதன்பின், வரும் 26-ஆம் தேதி நண்பர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கென மும்பையில் பார்ட்டியும் நடைபெற உள்ளது. தம்பதியர் இருவரும் கடந்த செவ்வாய் கிழமைதான் இந்தியா வந்தடைந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் விராட் கோலியின் சகோதரர் விகாஸ்-ம் உடனிருந்தனர். அப்போது, பிரதமர் மோடியை தங்கள் திருமண வரவேற்புக்கு அழைத்தனர்.

இந்த சந்திப்பின் புகைப்படம், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில், இருவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Virat kohli anushka sharma meet prime minister narendra modi see pic

Next Story
விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு: பாகிஸ்தானின் ‘கன்சிஸ்டன்சி கில்லி’!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com