Advertisment

விராட் கோலி பேட்டிங் வரிசை மாற்றம்? ரவி சாஸ்திரி கூறும் ரகசியம்

இந்தியாவுக்காக 4வது இடத்தில் விளையாடிய கோலியின் சாதனையை மேற்கோள் காட்டிய ரவி சாஸ்திரி, 7 சதங்களுடன் 55.21 சராசரியில் 1767 ரன்கள் எடுத்துள்ளார் என்றார்.

author-image
WebDesk
New Update
Virat Kohli at No. 4 spot, Ravi Shastri reveals strategy 2019 ODI World Cup Tamil News

'விராட் 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்றால், அவர் அணியின் நலன் கருதி அந்த இடத்தில் பேட் செய்வார். நான் அதைப் பற்றி நினைத்த நேரங்களும் உண்டு.' என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடந்தது. இந்த தொடருக்கான அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மிகவும் கசப்பான தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியின் போது இந்தியாவுக்கு ஒரு முக்கிய கவலையாக இருந்தது, ஆடும் லெவனில் 4வது இடம் தான். அந்த இடத்தில் விளையாடி வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Advertisment

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 239 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்திய அணியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 32 ரன்கள் தான் எடுத்தார். டாப் ஆடரில் களமாடிய கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். அப்போதைய தலைமைப் பயிற்சியாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அந்த 4-வது இடத்தில் விராட் கோலியை தான் பயன்படுத்த நினைத்ததாக தெரிவித்தார்.

இந்தியாவுக்காக 4வது இடத்தில் விளையாடிய கோலியின் சாதனையை மேற்கோள் காட்டிய அவர், 7 சதங்களுடன் 55.21 சராசரியில் 1767 ரன்கள் எடுத்துள்ளார் என்றும், அவர் டாப் 4ல் நெகிழ்வாக இருக்க விரும்புவதாகவும், கோலி அணிக்கு தேவையான இடத்தில் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாகவும் ரவி சாஸ்திரி கூறினார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ஷன் டே ஷோ-வில் பேசிய ரவி சாஸ்திரி, “விராட் 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்றால், அவர் அணியின் நலன் கருதி அந்த இடத்தில் பேட் செய்வார். நான் அதைப் பற்றி நினைத்த நேரங்களும் உண்டு.

"முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளில் கூட, நான் 2019ல் பயிற்சியாளராக இருந்தபோது, ​​டாப் ஆடர் பேட்டிங் வரிசையை உடைக்க எம்.எஸ்.கே மற்றும் அவரும் 4வது பேட்டிங் செய்வது பற்றி நான் விவாதித்திருக்கலாம்.

ஏனென்றால், நாம் மேலே டாப் ஆடரில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டை இழந்தால், நாம் முழுவதுமாக இழந்துவிடுவோம். அது அந்த அனுபவத்தை அடைவதற்காக நிரூபிக்கப்பட்டது. மேலும் விராட் கோலியின் சாதனையைப் பார்த்தால், அவர் நான்காவது இடத்தில் விளையாட போதுமானவர்." என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Indian Cricket Team Indian Cricket Worldcup Ravi Shastri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment