Advertisment

கோலி பேட்டிங் vs பும்ரா பந்துவீச்சு... நெட் பயிற்சியில் மோதிய ஜாம்பவன்கள்: வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி பேட்டர் விராட் கோலி பேட்டிங் செய்ய முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா பந்து வீச இருவரும் நெட்டில் பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
kohli bumrah

விராட் கோலி பேட்டிங் செய்ய பும்ரா பந்து வீச இருவரும் நெட்டில் பயிற்சி செய்த காட்சி Image Source: X/@StarSportsIndia

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. 

Advertisment

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னணி பேட்டர் விராட் கோலி பேட்டிங் செய்ய முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா பந்து வீச இரண்டு ஜாம்பவான்கள் நெட்டில் பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலியின் பேட்டிங் செய்ய ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீசுவதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்ள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். உலகம் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவர் கோலி என்றால், வேகப்பந்துவீச்சில் பும்ராவும் அப்படித்தான். 

எந்த ஒரு பந்து வீச்சாளரும் பந்து வீச விரும்பாத ஒரு பேட்டர் கோஹ்லி. மறுபுறம், எந்த பேட்டரும் பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க விரும்பமாட்டார்கள். இப்படி, இருவரும் கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களாக திகழ்கிறார்கள். 

Advertisment
Advertisement

கோலியும் பும்ராவும் எதிரெதிராக ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். கோலி பேட்டிங் செய்ய பும்ரா பந்துவீசுவதைப் பார்க்கும் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் பார்ப்பார்கள். இருவரும் இப்படி விளையாடுவது ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமல்ல, இந்திய அணியில் வலை பயிற்சி செய்யும்போதும் கோலி பேட்டிங் vs பும்ரா பந்துவீச்சு நடக்கும். 

ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.  இந்தியா - ஆஸ்திரேலியா சுற்றுப்பயணப் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், பும்ரா கோஹ்லிக்கு பந்து வீசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பாருங்கள்: 

இந்த வீடியோவில் பும்ரா வீசும் பந்துகளை கோலி சில பந்துகளை அடிக்க முடியாமல் திணறுகிறார். சில பந்துகளை அடித்து ஆடுகிறார். சில பந்துகளை தடுத்து ஆடுகிறார். சில பந்துகளை அடிக்க முடியாமல் பின்னால் விடுகிறார். தற்கால கிரிக்கெட் உலகின் 2 ஜாம்பவான்கள் விளையாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்து வைரலாகி் வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Jasprit Bumrah Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment