இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று வியாழக்கிழமை முதல் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் இந்தியா 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து, நியூசிலாந்து அதன் 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்தப் போட்டிக்கான முதல் இன்னிங்சில் இந்திய அணிக்காக பேட்டிங் ஆட களமாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 9 பந்துகளை எதிர் கொண்ட நிலையில், அவர் ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினர். அவரது அவுட் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli bowled off a low full toss: an absurd moment that even he realised
விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், இதுவரை நூறு வித்தியாசமான வழிகளில் ஆட்டமிழந்துள்ளார். அவற்றில் சிலவற்றை மட்டுமே அவர் நினைவில் வைத்திருப்பார். ஆனால், தனது 198-வது டெஸ்ட் போட்டியில் அவர் வினோதமாக அவுட் ஆகியது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கும். அதனை அவர் மறக்கவும் மாட்டார்.
மிட்செல் சான்ட்னர் வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் கோலி. பந்தை ஃபுல் டாஸில் சான்ட்னர் வீசிய நிலையில், அதனை மிகவும் உறுதியான முறையில் அடித்து ஆட வந்தார் கோலி. ஆனால் பேட்டை வேகமாக, பந்து வரும் முன்னரே அவர் சுழற்றினார். அப்போது, மிட்செல் சான்ட்னர் வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தை அவர் தவறவிட்டார். பந்து நேராக சென்று அவருக்கு பின்புறம் இருந்த ஸ்டெம்பை பதம் பார்த்தது.
இந்த பந்தை கோலி முன்னோக்கி வந்து மடக்கி அடித்திருக்கலாம் அல்லது தடுத்து இருக்கலாம். அல்லது லாங்-ஆன் முதல் மிட்விக்கெட் வரையிலான திசையில் பந்தை விரட்டி இருக்கலாம். சற்று இறங்கி வந்து பந்தை பவுலரின் தலைக்கு மேல் ஃபிளிக் செய்து இருக்கலாம். அவற்றை தவிர்த்த கோலி ஸ்லாக்-ஸ்வீப் ஆட சென்றார். இந்த தருணத்தின் அபத்தம் கோலிக்கே தெரியும்.
கோலியின் இந்த சிறந்த மற்றும் வித்தியாசமான ஆட்டத்தை புனே மக்கள் பார்க்க வேண்டும் என இருந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோரான 254 ரன்களை, வலுவான தென் ஆப்பிரிக்கா தாக்குதலுக்கு எதிராக திரட்டி இருந்தார். ஆனால், இப்போது, அவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஃபுல் டாஸில் அவுட் ஆக வேண்டும் என்கிற விதியை தேர்ந்தெடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“