Advertisment

ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் 2 பெரிய உலகக் கோப்பை சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியில் அதிக சதம் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Virat Kohli breaks Sachin Tendulkar record in IND vs NZ CWC 2023 Tamil News

கோலி 80* ரன்களை எட்டிய போது ஒரே ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

worldcup 2023 | india-vs-new-zealand | virat-kohli: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 

Advertisment

இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் அரையிறுதியில் நியூசிலாந்து -  இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

இந்நிலையில், இந்தப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து தனது அதிரடியை கைவிடாத அவர் 106 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் இரண்டு பெரிய உலகக் கோப்பை சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியில் அதிக சதம் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். 

35 வயதான விராட் கோலி இந்தப் போட்டியில் கோலி 50 ரன்களை எட்டிய போது, ஒருநாள் உலகக் கோப்பைப்யில் எட்டு அரைசதத்திற்கு மேல் ஸ்கோரை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இதற்கு முன்பு ஏழு 50-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். சச்சின் 2003 பதிப்பின் போது 7 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோரைப் பதிவு செய்தார். மேலும் வங்காளதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2019ல் அதே எண்ணிக்கையிலான ஐம்பது-பிளஸ் ரன்களை எடுத்திருந்தார். 

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக 50-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள்:

8* - 2023ல் விராட் கோலி
7 - 2019 இல் ஷகிப் அல் ஹசன்
7 - 2003ல் சச்சின் டெண்டுல்கர்

கோலி 80* ரன்களை எட்டிய போது ஒரே ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 10 இன்னிங்ஸ்களில் 691 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 2003 பதிப்பின் போது 673 ரன்களை பதிவு செய்தார். அதில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 2007-ம் ஆண்டு முதல் மேத்யூ ஹைடன் 659 ரன்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்கள் எடுத்திருந்தார்.


ஒரே ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:

விராட் கோலி - 10 இன்னிங்ஸில் 674* ரன்கள், 2023
சச்சின் டெண்டுல்கர் - 673 ரன்கள் 11 இன்னிங்ஸ், 2003
மேத்யூ ஹைடன் - 10 இன்னிங்ஸில் 659 ரன்கள், 2007
ரோகித் சர்மா - 9 இன்னிங்ஸில் 648 ரன்கள், 2019
டேவிட் வார்னர் - 9 இன்னிங்ஸில் 647 ரன்கள், 2019.

 

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதன் மூலம், அவர் சச்சின் டெண்டுல்கரை பதிவு செய்த 49 ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடித்தார்.  

ஒருநாள் போட்டியில் அதிக சதம் 

50 - விராட் கோலி
49 - சச்சின் டெண்டுல்கர்
31 - ரோஹித் சர்மா
30 - ரிக்கி பாண்டிங்
28 - சனத் ஜெயசூர்யா. 

இந்தப் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் 113 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs New Zealand Virat Kohli Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment