பிரபல இந்திய கிரிகெட் அணி வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் கதை இளைஞர்கள் மத்தியில் மிகவும் உன்னதமாக பேசப்பட்ட ஒன்றாகும். இவர்கள் காதலித்து வந்த காலங்களில், இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதைக் கைவிடாத அனுஷ்கா சமீபத்தில் திகில் படத்திலும் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஐபிஎல் போட்டியில், பெங்களுரு அணிக்கு விளையாடி வருகிறார். இருவருக்கும் உள்ள பிஸியான தருணத்தில் மீண்டும் இணையதளத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்துள்ளார் விராட்.
மே 1ம் தேதியான இன்று அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை இளம் ஜோடி இணைந்து கொண்டாடியுள்ளது. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தனிமையில் அனுஷ்கா பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தின் ஃபோட்டோவை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது மனைவி க்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
Happy B'day my love. The most positive and honest person I know. Love you ♥️ pic.twitter.com/WTepj5e4pe
— Virat Kohli (@imVkohli) May 1, 2018
இந்தப் பதிவு சமூக வலைத்தளங்கள் முழுவதும் வரைலாகி வருகிறது. இன்று முழுவதும் அனுஷ்காவின் பிறந்தநாளை இருவரும் கொண்டாட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.