ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் போது, விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 13,000 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம் ஆண்கள் ஒரு நாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது வீரர் ஆனார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோர் அவருக்கு முன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
சச்சின் இந்த இலக்கை எட்ட 321 இன்னிங்ஸ்கள் எடுத்த நிலையில், கோலி 267 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டியுள்ளார். பாண்டிங் (341), சங்கக்காரா (363) ஆகியோர் 300 இன்னிங்ஸ்களுக்கு மேல் எடுத்தனர், அதே நேரத்தில் ஜெயசூர்யா 416 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினர்.
மேலும் இந்த 5 பேரில் 50க்கு மேல் சராசரியாக வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் கோலி மட்டும்தான். ஒரு நாள் போட்டிகளில் 47 சதங்கள் அடித்துள்ள கோலிக்கு, சச்சினின் ஒரு நாள் போட்டிகளின் சதங்களின் சாதனையை சமன் செய்ய இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே உள்ளது.
திங்களன்று நடந்த ஆசிய கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜில் பாகிஸ்தானுக்கு எதிராக 84 பந்துகளில் தனது சதத்தை எட்டிய விராட் கோலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது 47வது சதத்தை அடித்தார். கொழும்பில் நான்கு இன்னிங்ஸ்களில் கோலி அடித்த நான்காவது சதம் இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“