Advertisment

'71வது சதம் அடிக்கும் வரை திருமணம் இல்லை': உறுதியளித்த ரசிகருக்கு கோலி கொடுத்த 'சிறந்த திருமண பரிசு'

எல்லா வீரர்களுக்கும் எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கோலி எதிர்கொண்டு இருந்தார்.

author-image
WebDesk
Jan 18, 2023 14:47 IST
Virat Kohli Fan gets 'The Best Wedding Gift' tamil news

Virat Kohli Fan one who Pledged To Not Marry Until Cricketer Scores 71st Century, Gets 'The Best Wedding Gift' Tamil News

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக களமாடி வருகிறார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனி முத்திரை பதித்து வரும் இவர் ஏராளமான படைத்தவராக இருக்கிறார். இவரது ஆட்டத்தை கண்டு களிக்கும் மற்றும் இவரை பின்தொடரும் ரசிகர்கள் உலகெங்கும் எண்ணற்றவர்கள் உள்ளனர்.

Advertisment

அந்த வகையில் கோலியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் அமன் அகர்வால். தான் கோலியின் தீவிரமான ரசிகர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக, அகர்வால் ‘கோலி 71-வது சதத்தை பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று கூறியிருந்தார்.

ஏன்னென்றால், எல்லா வீரர்களுக்கும் எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கோலி எதிர்கொண்டு இருந்தார். அவரது மட்டை சுழற்றலை கணித்த பந்துவீச்சாளர்கள் அவரை எளிதில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினர். இதனால், அவரது ரசிகர்கள் கோலி எப்போது சதம் விளாசுவார் என்று காத்துக்கிடந்தனர். மேலும், கோலியின் மீது தொடர் விமர்சனங்களும் எழுந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தனது 71வது சர்வதேச சதத்தை விளாசினார். அவர் 2019 நவம்பரில் 70-வது சதத்தை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிவு செய்த நிலையில், பிறகு தனது 71-வது சதத்தை சுமார் 1020 நாட்களுக்கு பிறகு, பதிவு செய்து இருந்தார் கோலி.

இந்நிலையில், கோலியின் தீவிர ரசிகரான அமனுக்கு கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடந்துள்ளது. அன்றைய தினம்தான் கோலி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 74-வது சர்வதேச சதத்தை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து அவர் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

publive-image

இந்த நிலையில், கோலியின் சதம் குறித்து ட்வீட் செய்த அமன் அகர்வால், “நான் 71-வது சதம்தான் கேட்டேன். ஆனால் எனது வாழ்நாளின் ஸ்பெஷல் நாளன்று அவர் 74-வது சதம் பதிவு செய்துவிட்டார்” என்று பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sports #India Vs Srilanka #Indian Cricket #Virat Kohli #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment