உலக அழகி மனுஷி சில்லாருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பு சாதனையாளர் விருதை வழங்கினார். அப்போது, மனுஷி சில்லார் கேட்ட கேள்வியும், அதற்கு விராட் கோலி கூறிய பதிலும் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
17 ஆண்டுகள் கழித்து இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மனுஷி சில்லாரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு சாதனையாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கலந்துகொண்டு மனுஷி சில்லாருக்கு விருது வழங்கினர்.
இதன்பின், மனுஷி சில்லார் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்டார். “உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள், கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”, என கேட்டார்.
அதற்கு, “நாம் களத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும், அதற்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் நீங்களாகவே இருங்கள். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், நான் எப்போது மாற வேண்டும் என நினைக்கின்றேனோ அப்போதுதான் நான் மாறுவேன்.”, என தெரிவித்தார்.
#IndianOfTheYear - Miss World 2017 @ManushiChhillar had a question for team India skipper @imVkohli
Watch the event here - https://t.co/Nr4TFMc7XT and Jio TV | #IndianOfTheYear @reliancejio @JioChat pic.twitter.com/p1W5ce8W9E— News18 (@CNNnews18) 30 November 2017
இந்த நிகழ்ச்சியில் விராட் கோலிக்கு, ‘பாப்புலர் சாய்ஸ்’ விருதை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். அதுமட்டுமல்லாமல், ரவி சாஸ்திரி, கபில் தேவ் ஆகியோருக்கும் சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
I’m fortunate to be getting the #IndianOfTheYear 2017 @reliancejio Popular Choice Award from Finance Minister @arunjaitley: @imvkohli | Watch live on https://t.co/hnn1Ot74Tq and Jio TV | #IndianOfTheYear pic.twitter.com/S7apJILkbD
— News18 (@CNNnews18) 30 November 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.