இந்தியா - பங்களாதேஷ் இடையே அணிகளுக்கு இடையே சாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சத்தேஷ்வர் புஜாரா அதிரடியாக விளையாடி அதி வேக சதம் அடித்ததை கேப்டன் விராட் கோஹ்லி தான் சதம் அடித்தது போல சந்தோஷமாக் ரியாஷன் கொடுத்து கொண்டாடினார். இந்த வீடியோவைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோஹ்லியை பாராட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்று சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதையடுத்து, இந்தியா - பங்களாதேஷ் இடையே அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.
பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சத்தேஷ்வர் புஜாரா, 1143 நாட்களுக்கு பிறகு, சதம் அடித்து தனது 19வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
அதிரடியாக விளையாடிய புஜாரா 130 பந்துகளில் 12 பவுண்டரிகள் விளாசி சதத்தை எட்டினார். இது புஜாராவின் அதிவேக டெஸ்ட் சதம் ஆகும். புஜாரா அடித்ததும் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி இதன் மூலம், பங்களாதேஷ் அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா சொதப்பியதால், அவர் பிப்ரவரியில் இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அணியில் இடம்பெற வில்லை. இருப்பினும், 34 வயதான வலது கை நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா இங்கிலாந்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக விளையாடி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து இந்திய அணிக்கு திரும்ப தேர்வானார்.
பங்களாதேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸில் புஜாரா 130 பந்துகளில் தனது அதிவேக டெஸ்ட் சதத்தை எட்டியதும் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாக வாழ்த்து தெரிவித்தனர். அதைவிட, எதிர் முனையில் இருந்த விராட் கோஹ்லி, பேட்டை உயர்த்தி கைகளை உயர்த்தி தான் சதம் அடித்தது மாதிரியே சந்தோஷமாகக் கொண்டாடினார்.
புஜாரா சதம் அடித்ததைப் பாராட்டிய விராட் கோஹ்லியின் ரியாக்ஷன் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சக வீரர் சதம் அடித்ததை, தான் அடித்தது மாதிரியே கொண்டாடுவதற்கு பரந்த மனம் வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கோஹ்லியைப் பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”