பேட்டிங் மேஸ்ட்ரோ விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடி மற்றொரு சதம் அடித்து 166 ரன்கள் எடுத்தார். இது இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 390/5 என்ற மகத்தான இலக்கை நிர்ணயிக்க உதவியது.
34 வயதான விராட் கோலி தனது 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி தனது விருப்பமான எதிரணியான இலங்கைக்கு எதிராக தனது 10வது ஒருநாள் சதத்தை மீண்டும் ஒருமுறை அடித்தார்.
இந்தப்போட்டியில் திடமான தொடக்க நிலைக்குப் பிறகு ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இந்தியா இழந்தபோது கோலி விறுவிறுப்பான தொடக்கத்தைத் தொடங்கினார். 34 வயதான கோலி இன்னிங்ஸின் தொடக்கத்தில் விருப்பப்படி பவுண்டரிகளை அடித்தார், பின்னர் சுப்மன் கில் பந்துவீச்சாளர்களை விளாச ஆரம்பித்தப்போது, கோலி மறுமுனையில் அவருக்கு கம்பெனி கொடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து அசத்தினார். கோலி மற்றும் கில் இருவரும் 131 ரன் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார்.
சதம் அடித்த பிறகு கியரை மாற்றிய கோலி குறைந்த நேரத்தில் 150 ரன்களை எடுத்து அசத்தினார். கோலி லாஃப்டிங், டிரைவிங், ஃபிளிக் செய்து, கடைசி ஓவரில் குமாராவின் டீப் மிட் விக்கெட்டுக்கு மேல் ஒரு சிக்சருடன் 150 ரன்களைப் பெற்றார். கில் வெளியேறிய பிறகு, ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த கோலி ஒரு முக்கியமான 108 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்த பார்ட்னர்ஷிப்பின் போது சிக்சரும் பவுண்டரிகளுமாக அடித்து இலங்கை பந்து வீச்சாளர்களை நொறுக்கினார். மெதுவாக வந்த பந்துகள் பவுண்டரிகளாக பறந்தன. கோலி அதிரடியாக ஆடி விரைவாக ரன்களை எடுத்தார். விக்கெட்டுகளுக்கு இடையே விரைவான ஓட்டம் இருந்தது. 85 பந்துகளில் சதமடித்த கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 46 ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.
கடைசி பத்து ஓவர்களில், இந்தியா அடித்த 116 ரன்களில் 84 ரன்களை கோலி எடுத்து அசத்தினார். இந்தத் தொடரில் கோலியின் இரண்டாவது சதம் இது, இந்திய கிரிக்கெட்டில் இறுதியாக இயல்பு நிலை திரும்பியது போல் தெரிகிறது. கோலியின் மாஸ்டர் கிளாஸால் கிரிக்கெட் வட்டாரமும் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் வீழ்ந்தாலும், கோலியைத் தடுக்க முடியவில்லை.
கோலியின் அற்புதமான சதத்திற்கு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil