ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை மிகவும் விரும்பும் கோலி, அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 7-வது சதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்திருந்தார். அவரது சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த சாதனை இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் வசம் உள்ளது. அவர் 9 சதங்கள் அடித்துள்ளார். கோலி தற்போது வால்டர் ஹேமண்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கோலியின் சாதனைகளில் மற்றுமொரு மைல்கல் இதுவாகும்.
தற்போது வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி 14 போட்டிகளில் 24 இன்னிங்ஸ் விளையாடி, 1457 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 169 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலி சதமடித்ததும் ஜஸ்பிரித் பும்ரா டிக்ளேர் செய்தார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்தது. 534 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெர்த்தில் கோலியின் இரண்டாவது சதம் இதுவாகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்ததன் மூலம் டான் பிராட்மேனின் சாதனை கோலி முறியடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“