IND vs ENG: கோலி ஏன் முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை? விளக்கும் ரோகித்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணி முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் தொடங்கி நடக்கிறது. இந்தப் போட்டியை தவறவிட்டார் விராட் கோலி.

author-image
WebDesk
New Update
Virat Kohli Injury scare Rohit Sharma explains India vs England 1st ODI in Nagpur Tamil News

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆடவில்லை.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 1st ODI

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான  முதலாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணி  முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் தொடங்கி நடக்கிறது. 

கோலிக்கு காயம்?

Advertisment
Advertisements

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து  அணி முதல் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,  'இந்த ஆட்டத்தில் துரதிருஷ்டவசமாக விராட் விளையாடவில்லை. அவருக்கு நேற்று இரவு முழங்கால் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இந்தப் போட்டியில்  ஆடாமல் ஓய்வு எடுத்து வருகிறார்' என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

இது தொடர்பாக வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி கூறுகையில், விராட் கோலிக்கு நேற்று இரவு முழங்கால் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால், இந்திய அணி நிர்வாகம் கோலியை ஆட வைத்து எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்று  தெரிவித்தார். 

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி. 

இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.  

Virat Kohli India Vs England Rohit Sharma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: