ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) இன்று வியாழக்கிழமை (டிச.26) பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணியின் 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் அறிமுக வீரராக களம் கண்ட நிலையில், அவர் பும்ராவின் பந்துகளை அடித்து விரட்டினார். 2021 ஆம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் பும்ரா பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். பும்ராவின் ஓவர்களில் மட்டும் 33 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். மேலும், 52 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
சாம் கோன்ஸ்டாஸ் அதிக நம்பிக்கையுடன் அதிரடியாக ஆடி வந்த நிலையில் விராட் கோலி வேண்டுமென்றே அவரை இடித்தார். போட்டியின் 10-வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார்.
இதன்பின்னர், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர். முதலில் சாம் கோன்ஸ்டாஸ் வேண்டும் என்று இடித்து இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தொடரை ஒளிபரப்பி வரும் ஆஸ்திரேலியாவின் சேனல் 7 ரீப்ளேவில் உண்மையில் நடந்து என்ன? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
விராட் கோலி தான் வேண்டும் என்று தான் நடந்து சென்ற பாதையை மாற்றி சாம் கோன்ஸ்டாஸை இடித்து இருக்கிறார். இந்நிலையில், மூத்த வீரரும், 39 வயதான விராட் கோலி, 19 வயது இளம் வீரரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்றும், இந்த நல்ல அறிகுறியாக இல்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டின் பிராண்ட் அம்பாசிடரான விராட் கோலி, 19 வயது அறிமுக வீரருக்கு எதிரான இதுபோன்ற செயலை செய்யலாமா? என்றும் இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மறுபுறம், ஆஸ்திரேலியா ரசிகர்கள், விராட் கோலியை தடை செய்ய வேண்டும். அவர் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வர்ணனையில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் முழு ஆடுகளத்தையும் விட்டு விட்டு அவரது வலதுபுறமாக நடந்து அந்த மோதலை தூண்டுகிறது. இது மோதல் தான் என்று என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.
Kohli and Konstas come together and make contact 👀#AUSvIND pic.twitter.com/adb09clEqd
— 7Cricket (@7Cricket) December 26, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.