Virat Kohli, Kieron Pollard combine to claim embarrassing golden duck record - விராட் கோலி, பொல்லார்ட் நிகழ்த்திய 'கோல்டன் டக்' சாதனை!
"அடேங்கப்பா... அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்ளோ இரத்தம் வருதுன்னா... அடிவாங்குனவன் இந்நேரம் உயிரோடு இருப்பான்னு நினைக்குற நீ?" என்ற கவிதைக்கு ஏற்ப, சில பல சேதாரங்களுக்கு மத்தியில், வெஸ்ட் இண்டீசை வச்சு செய்திருக்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி.
Advertisment
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 102 ரன்களும், ரோஹித் 159 ரன்களும் குவித்து ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.
பிறகு பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களை வெடிக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் விளாசினார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.
பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 43.3வது ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ், தனது சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது ஹாட்ரிக்கை கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸின்' கேப்டன் பொல்லார்ட், தான் சந்தித்த முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து கோல்டன் ஆகி வெளியேறினார்.
இரு அணிகளும் சேர்ந்து 667 ரன்கள் குவித்திருக்கிறது. ஆனால், இரு அணியின் கேப்டன்களும், முதல் பந்திலேயே அவுட். இத்தனை வருட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இரு அணிகளின் கேப்டனும் கோல்டன் டக் ஆகி இருப்பது இதுவே முதன் முறையாம்!.
சும்மா இருப்பாங்களா நம்ம ஆளுங்க? கோல்டன் டக் என்பதையே இந்திய லெவல் டிரெண்டிங் ஆக்கிட்டாங்க!!!