/indian-express-tamil/media/media_files/2025/05/01/AIB3kqPf3TrxIb0tkX8B.jpg)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலை பகிர்ந்துள்ளார். அதற்கு சிம்பு பதில் பதிவு போட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாக ஆடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது.
அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸு நாளை மறுநாள் சனிக்கிழமை மோதுகிறது. இப்போட்டியானது இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று பகிராப்ட்டுள்ளது. அதில், உங்களுக்கு சமீபத்தில் அதிகம் பிடித்த பாடல் எது ? எனக் கோலியிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த கோலி, அதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் எனக் குறிப்பிட்டு, 'நீ சிங்கம் தான்' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
𝐖𝐡𝐢𝐜𝐡 𝐬𝐨𝐧𝐠 𝐢𝐬 𝐕𝐢𝐫𝐚𝐭 𝐥𝐢𝐬𝐭𝐞𝐧𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐨𝐧 𝐥𝐨𝐨𝐩 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐧𝐨𝐰? 🎶
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 1, 2025
“You’ll be shocked”, he says. We’re grooving too! 🥰 pic.twitter.com/NlZTNAZbjD
கோலி பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகிய நிலையில், அந்த வீடியோவுக்கு சிம்பு ரிப்ளை கொடுத்துள்ளார். அதில் அவரும் 'நீ சிங்கம் தான்' என்று குறிப்பிட்டு, கோலியை டேக் செய்துள்ளார். மேலும் ஹார்ட் மற்றும் தீப் பொறி இமோஜிகளையும் சிம்பு பதிவிட்டுள்ளார்.
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
சிம்பு நடித்த 'பத்து தல'படத்தில் 'நீ சிங்கம் தான் பாடல்' இடம் பெற்றுள்ளது . இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.