Virat Kholi | Indian Cricket Team | Royal Challengers Bangalore: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வருபவர் விராட் கோலி. கடந்த 2008ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 113 டெஸ்ட், 292 ஒருநாள் மற்றும் 117 டி-20 போட்டிகளில் ஆடி முறையே 8848, 13848, 4037 ரன்களை குவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் களமாடி வரும் கோலி, நடப்பு சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 155.16 ஸ்டிரைக் ரேட் மற்றும் 66.10 சராசரியுடன் 661 ரன்கள் எடுத்து தொடரில் டாப் ஸ்கோரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். ஆர்.சி.பி-யின் ராயல் காலா டின்னர் வீடியோவில் கோலி பேசுகையில், "ஒரு விளையாட்டு வீரராக, எங்கள் விளையாட்டு வாழ்க்கைக்கு ஒரு முடிவு தேதி உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கிறேன்.
'ஐயோ, குறிப்பிட்ட நாளில் இதைச் செய்திருந்தால் என்ன' என்று நினைத்துக் கொண்டு என் விளையாட்டு வாழ்க்கையை முடிக்க விரும்பவில்லை, ஏனென்றால் என்னால் எப்போதும் தொடர்ந்து செல்ல முடியாது. எனவே, செயல்தவிர்க்கப்படாத எந்த ஒரு தொழிலையும் விட்டுவிடாமல், பின்னர் வருத்தப்பட வேண்டாம், நான் நிச்சயமாக அதை செய்ய மாட்டேன்.
எனது வேலையை முடித்தவுடன், நான் போய்விடுவேன், நீங்கள் என்னை சிறிது நேரம் பார்க்க மாட்டீர்கள் (சிரிக்கிறார்). அதனால் நான் விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன், அதுதான் என்னை முன்னோக்கி செல்ல வைக்கிறது." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“