லண்டன் உணவகத்தில் மகள் வாமிகாவுடன் கோலி... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Virat Kohli photo with daughter Vamika goes viral on social media Tamil News

சமூக ஊடகத்தை கலக்கும் விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் இருக்கும் புகைப்படம்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Virat Kohli:இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்த இவர், இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. 

Advertisment

இந்நிலையில், விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

இதேபோல், விராட் கோலி எக்ஸ் தள பதிவில், "எங்களது இதயங்களில் மகிழ்ச்சியும் அன்பும் முழுவதுமாக நிறைந்துள்ளது. எங்களுக்கு கடந்த பிப்ரவரி 15 -ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எங்களது குடும்பத்தின் புது உறுப்பினரான வாமிகாவின் சகோதரன் அகாயை இந்த உலகத்துக்கு வரவேற்கிறோம்.

எங்களது வாழ்வின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும் எங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த தருணத்தில் எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன் விராட் மற்றும் அனுஷ்கா" என்று பதிவிட்டார். 

வைரல் புகைப்படம் 

Advertisment
Advertisements

இந்த நிலையில், விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் வாமிகா உணவு உட்கொள்கிறார். அவருக்கு அருகில் அமர்ந்துள்ள கோலியும் உணவு சாப்பிடுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Virat Kohli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: