ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் தூக்கத்தில் கூட, ‘எங்கள் அணி போட்டியை வெல்லவில்லை; இதயத்தை வென்றுவிட்டது’ என்பார்கள். அவ்வளவு வெறித்தன ரசிகர்களைக் கொண்ட ஆர்சிபிக்கு ஏனோ கோப்பை என்பது கனவாகவே உள்ளது. குறைந்தபட்சம் ஒவ்வொரு தொடரிலும் ஆதிக்கம் கூட செலுத்த முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் சீசனில் என்ன செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, ‘ஆட்டோ கண்ணாடியை மாற்றினால் வெற்றி’ என்று முழங்கியிருக்கிறது அந்த அணி நிர்வாகம்.
அதாவது அணியின் பெயரை, லோகோவை மாற்றப் போகிறார்களாம்.
இதனால் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் ஆர்சிபி பக்கங்களில் லோகோ நீக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டா பேஜில் தனது போஸ்ட்களையே நீக்கிவிட்டது நிர்வாகம்.
இதைப் பார்த்து ஜெர்க் ஆன ஆர்சிபி வீரர் சாஹல், ‘என்னயா பண்ணி வச்சிருக்கீங்க?’ மோடில் ட்வீட் செய்ய,
Arey @rcbtweets, what googly is this? ???? Where did your profile pic and Instagram posts go? ????
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 12, 2020
கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில், “ஆர்சிபி போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன; கேப்டனிடம் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று காண்டாகி பதிவிட்டுள்ளார்.
Posts disappear and the captain isn’t informed. ???? @rcbtweets, let me know if you need any help.
— Virat Kohli (@imVkohli) February 13, 2020
கேப்டனுக்கே கம்யூனிகேஷன் இல்லையா!!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Virat kohli rcb social media handles blank chahal