இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. ஐசிசியின் 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள இவர். இந்திய அணியின் கேப்டனாக இருந்து கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்
Advertisment
ஆனால் அதற்கு முன்னதாகவே போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளானார். இதில் ஒரு பிரிவினர் விராட்கோலிக்கு ஆதராவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஒரு பிரிவினர் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பேச தொடங்கினர்.
ஆனாலும் விராட்கோலி தொடர்ந்து அணியில் நீடித்து வந்த நிலையில், ஒவ்வொரு போட்டியில் அவர் விளைாடி அவுட் ஆகும்போதும் அவர் சதமடித்து இத்தனை நாட்கள் ஆகிறது என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட்கோலி மீண்டு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆசியகோப்பை டி20 தொடரில் களமிறங்கிய விராட்கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 30 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், ஹாங்காங் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்ளுக்கு எதிரான சொற்ப ரன்களில் ஆட்டமிந்தார்.
இதனிடையே ஆசியகோப்பை டி20 தொடரில் இந்திய தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட்கோலி அதிரடியாக சிக்சர் பவுண்டரிகள் விளாசி சதமடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
மேலும் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் 71-வது சதத்தை பூர்த்தி செய்த விராட்கோலி, சுமார் 1000 நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் சதம் கண்டுள்ளார். இந்த போட்டிக்கு முன்பாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி சதம் அடித்திருந்தார். சர்வதேச அளவில் 71 சதங்கள் அடித்ததன் மூலம் விராட்கோலி ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்
இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கடைசி வரை களத்தில் இருந்த விராட்கோலி 61 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சருடன் 122 ரன்கள் குவித்தார். சதமடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“