Virat Kohli Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது. இதனிடையே, நேற்று நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 1021 நாட்களுக்கு பிறகு தனது 71 ஆவது சர்வதேச சதத்தை பூர்த்திசெய்தார். அதேடு டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை நிறைவுசெய்தார். மொத்தம் 61 பந்துகளை சந்தித்திருந்த கோலி 12 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 122 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், விராட் கோலி முறியடித்துள்ள சாதனை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கோலி, 61 பந்துகளில் 122* ரன்கள் என சரியாக 200 ஸ்டிரைக் ரேட்டில் இருந்தார். அப்போது இந்திய அணி 212 ரன்களை குவித்து இருந்தது. இது நடப்பு ஆசிய கோப்பை தொடரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதேபோல், ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் மற்றும் குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
33 வயதான கோலி கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் சதம் அடித்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அவர் அடித்த சதம் 2019 க்குப் பிறகு அவரது முதல் சதம் மட்டுமல்ல, டி20 போட்டிகளிலும் அது அவருக்கு முதலாவது சதமாகும். மேலும், டி20 போட்டிகளில் ஒரு இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ரோகித் ஷர்மா 118 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த வடிவத்தில் எந்த வீரரும் எடுத்த 13வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அதிகபட்சம் பற்றி பேசுகையில், ஆப்கான் அணிக்கு எதிராக கோலி அடித்த 122 ரன்கள், துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் எந்த வீரரும் அடித்த தனிநபர் டி20 ஸ்கோர் ஆகும்.
சுரேஷ் ரெய்னா, கே.எல். ராகுல் (2), ரோஹித் ஷர்மா (4), தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவுக்காக டி20யில் டிரிபிள் ஸ்கோரை பதிவு செய்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றார்.
A long wait finally comes to an end.
— Star Sports (@StarSportsIndia) September 8, 2022
𝐓𝐇𝐀𝐓'𝐒 𝐀 💯 𝐅𝐎𝐑 𝐊𝐈𝐍𝐆 𝐊𝐎𝐇𝐋𝐈!
DP World #AsiaCup2022 #INDvAFG #BelieveInBlue #TeamIndia #KingKohli #71 pic.twitter.com/aypvxXYs6D
விராட் கோலியின் 50+ ஸ்கோர் மூலம், டி-20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இருந்த ரோகித் சர்மாவை (32) விஞ்சினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இன்னிங்ஸ் மூலம் கோலி, சச்சின் டெண்டுல்கருக்கு (100) அடுத்து அதிக சர்வதேச சதங்கள் அடித்தவர்களில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் சமன் செய்தார்.
அவரது இன்னிங்ஸின் போது, கோலி டி-20 சர்வதேச வடிவத்தில் 3500 ரன்களைக் கடந்தார். ரோகித்துக்குப் பிறகு (3620 ரன்கள்) அவ்வாறு செய்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற சாதனையும் படைத்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் தனது இரண்டாவது சிக்ஸருடன், ரோஹித் ஷர்மாவுக்கு (171) பிறகு 100 டி20 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.
மனைவிக்கும் மகளுக்கு சமர்ப்பணம் செய்து நெகிழ்ந்த கோலி
ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆயிரத்து 21 நாட்களுக்கு பிறகு சதமடித்துள்ள விராட் கோலி, தனது சதத்தை மனைவிக்கும், மகளுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகான போட்டியில் அவர் பேசுகையில், தனது கடினமான காலக்கட்டத்தில் தன்னுடன் நின்றவர் அனுஷ்கா சர்மா என்றும், அவருக்கும், மகள் வாமிகாவுக்கும் தனது சதத்தை சமர்ப்பிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஓய்வு எடுத்துக்கொண்டது கிரிக்கெட்டை மீண்டும் அனுபவிக்க அனுமதித்துள்ளதாகவும் விராட் கோலி குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil