Cricket news in tamil: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கை விரல் காயத்திலிருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ் அணியில் இணைகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலிக்கு முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு கோலிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கும் என்றும், நவம்பரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அவர் இருப்பார் என்றும் அறியப்படுகிறது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இடுப்பு காயம் காரணமாக வெளியேறிய கோலி, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இருந்தும் விலக வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே கோலியின் ஃபார்ம் குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர் சதம் அடிக்கவில்லை என்று கபில்தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அணியில் அவரது இடம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்செயலாக, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பேட்ஸ்மேன் கோலியின் வீழ்ச்சியை கபில் கணித்திருந்தார்; கோலியின் கண்பார்வை அனிச்சைகளின் வேகத்தைக் குறைப்பதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறிய அவர், அனிச்சை மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்த கோலி சிறப்புப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
தேர்வாளர்கள் காயத்தைப் பற்றி கவனமாக இருக்க விரும்புகிறார்கள். அது இன்னும் தீவிரமானதாக மாறாது. ஆட்டக்காரர் தன்னைத்தானே கடிமனான விஷயங்களுக்குள் ஈடுபடுத்திக் கொண்டால், இடுப்பு விகாரங்கள் இன்னும் எளிதில் மோசமடையலாம். ஒரு வீரர் நூறு சதவிகிதம் உடற்தகுதியுடன் இல்லாமல் களத்தில் இறங்கினால், அவர் வேகமாக சிங்கிள் ரன் எடுக்க முயற்சி செய்தலோ அல்லது ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சி செய்யும் நேரத்திலோ அவரது நிலையை மோசமாக்கும்.
இதற்கிடையில், குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வை முடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் டி20 தொடரின் போது வலைகளில் பேட்டிங் செய்யும்போது அவரது விரலில் காயம் ஏற்பட்டு இருந்தது.
பணிச்சுமை நிர்வாகத்தை மனதில் கொண்டு பும்ராவுக்கு தேர்வுக் குழு ஓய்வு அளித்துள்ளது. பும்ரா இடைவிடாத கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். மேலும் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி இன்னும் சில தொடர்களில் விளையாட இருப்பதால், அவருக்கு ஓய்வு கொடுப்பது நல்லது என்று தேர்வாளர்கள் கருதுகின்றனர் .
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், முதல் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு ஆட்டங்களும் செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பூங்காவில் நடைபெறும். புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெறும் இறுதி இரண்டு ஆட்டங்களுடன் தொடர் நிறைவடையும்.
முன்னதாக, ஜூலை 22 முதல் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைத் கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்து.
இத்தொடரில் இருந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், ஷமி, ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதிச் சுற்றோடு வெளியேறிய நிலையில், அக்டோபரில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் இந்திய அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அவ்வகையில், இங்கிலாந்தில் நடந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ் வரை 16 டி20 போட்டிகளில் 27 வீரர்களையும், 6 ஒருநாள் மற்றும் 8 டெஸ்ட் போட்டிகளில் தலா 21 வீரர்களையும் அணி நிர்வாகம் முயற்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, எஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் , ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல்,அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
*கேஎல் ராகுல் & குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.
Rohit Sharma (C), I Kishan, KL Rahul*, Suryakumar Yadav, D Hooda, S Iyer, D Karthik, R Pant, H Pandya, R Jadeja, Axar Patel, R Ashwin, R Bishnoi, Kuldeep Yadav*, B Kumar, Avesh Khan, Harshal Patel, Arshdeep Singh.
— BCCI (@BCCI) July 14, 2022
*Inclusion of KL Rahul & Kuldeep Yadav is subject to fitness.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil