ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி,ரோகித் சர்மா தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Advertisment
இன்று ஐ.சி.சி வெளியிட்ட தர்கவரிசைப் பட்டயலில், 871 புள்ளிகளுடன், விராட் கோலி முதலிடத்தல் உள்ளார். ரோஹித் ,பாபர் ஆசாம் முறையே 855, 829 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பும்ரா (719), முஜீப் உர் ரஹ்மான் (701) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா எட்டாவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் வந்த ஒரே இந்தியரும் இவரே. ஆப்கானிஸ்தானின் முகமது நபி உலகின் முன்னணி ஆல் ரவுண்டராக உள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தரவரிசைப் பட்டியலில் நல்ல முன்னேற்றங்களை கண்டுள்ளனர். ராய், பேர்ஸ்டோ முறையே 11, 14 வது இடத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் 30ம் தேதி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கு தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியாகவும் இந்த தொடர் அமைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil