இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரட் கோலி, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5000 ஆயிரம் ரன்களை கடந்தும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 20வது சதம் இதுவாகும்.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணியுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டில் டெல்லியில் நடந்து வருகிறது. டாஸில் வென்ற இந்திய அணி, மட்டைவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரெட் கோலி 110 பந்துகளில் சதம் அடித்தார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. அதிலும் அவர் சதம் அடித்தார். நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். மூன்றாவது டெஸ்ட்டிலும் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
December 2017
டெல்லி கிரவுண்டில் அவர் அடிக்கும் 13வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டியில் அவருக்கு இது 20வது சதமாகும். அதோடு 5000ம் ரன்களையும் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 10 இந்திய வீரர், விரட் கோலி. சுனில் கவாஸ்கர், சேவாக், கங்குலிக்கு அடுத்து வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.
இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 4வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 15 டெஸ்ட் இன்னிங்க்ஸ் விளையாடியுள்ள கோலி, 886 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த தொடரில் மட்டும் இதுவரையில் 450 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராக முன்னணியில் இருக்கிறார்.
மறுமுனையில் விளையாடிவரும் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜயும் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார்.