IND vs AUS 4th Test: Virat Kohli hits 28th Test century Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை (பிப்.9ம் தேதி) தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி, 4ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 128 ரன்கள் எடுத்தார். தற்போது சதம் விளாசிய கோலி அக்சர் படேலுடன் ஜோடி அமைத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
3 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்டில் சதம் - கோலி அசத்தல்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை அடித்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்து அசத்தினார். தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின் (1,206 நாட்கள் கழித்து) டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச அரங்கில் விராட் கோலி விளாசும் 75வது சதம் இதுவாகும்.
𝟏𝟎𝟎 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐧𝐠 𝐊𝐨𝐡𝐥𝐢 👑⚡️#INDvAUS #TeamIndia pic.twitter.com/UXGl32n3WL
— BCCI (@BCCI) March 12, 2023
The Man. The Celebration.
Take a bow, @imVkohli 💯🫡#INDvAUS #TeamIndia pic.twitter.com/QrL8qbj6s9— BCCI (@BCCI) March 12, 2023
Virat Kohli is on song here.
Back to back boundaries by him to get to his 150.#INDvAUS #TeamIndia @imVkohli pic.twitter.com/rEHsp7QvG8— BCCI (@BCCI) March 12, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.