/indian-express-tamil/media/media_files/YWxEAcgY8MDsuJWrR6Tl.jpg)
கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர்.
Virat Kohli:17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட இந்தத் தொடரில், அகமதாபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்?
இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை பெங்களூரு அணி ரத்து செய்தது. விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் குஜராத் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விளக்கம்
இந்த நிலையில், இன்றைய ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளின் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.